உணவுகளை இந்த நேரத்தில் சாப்பிட்டால் ஆபத்து
👉 நீண்ட நாட்கள் நோய் இல்லாமல் வாழ வேண்டும் என்றால், அதற்கு ஆரோக்கியமான உணவுமுறை அவசியம். அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவுகள் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்படி இல்லையென்றால் தேவையற்ற உடல் பிரச்சனைகள் ஏற்படும்.
👉 இங்கு எந்த உணவுகளை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
வாழைப்பழம் :
👉 வாழைப்பழம், நமது ஜீரண சக்தியை அதிகரிப்பது முதல் வயிற்று பிரச்சனைகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பது வரை பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
👉 வாழைப்பழத்தில் அதிக பொட்டாசியமும், நார்சத்தும் நிறைந்துள்ளது. பலரும் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை காலை உணவாகவே உட்கொள்கின்றனர். இது தவறானது.
👉 வாழைப்பழம் அமிலத்தன்மை கொண்டது. இதை வெறும் வயிற்றில் உட்கொண்டால் குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். அதேபோல் வாழைப்பழத்தில் சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதால் சில மணி நேரத்திலேயே உங்கள் உடலின் எனர்ஜி குறைந்து உங்களுக்கு சோர்வான உணர்வைத் தரும்.
👉 குடல் புண், அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிருங்கள்.
தயிர் :
👉 தயிர் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் கூட, இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு தயிர் சாப்பிட்டால் தயிரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் செரிமான பிரச்சனையை உண்டாக்கி, மூச்சுக் குழாயில் அடைப்பு, இருமல் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சாதம் :
👉 நாம் நாள் முழுக்க சுறுசுறுப்புடன் செயல்படத் தேவையான கார்போஹைட்ரேட்டை தருவது சாதம் தான். ஆனால், இரவு நேரத்தில் சாதம் சாப்பிட்டால் அதில் அதிகமாக இருக்கும் ஸ்டார்ச் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, உடல் எடையை அதிகரிக்கும்.
பால் :
👉 பாலில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், புரதம் மற்றும் கொழுப்பு என அனைத்துச் சத்துக்களும் நிறைந்துள்ளது. பாலை இரவு உறங்கப் போவதற்கு முன்பு குடித்தால் நல்ல நிம்மதியான தூக்கம் வருவதோடு பாலில் உள்ள மொத்த சத்துக்களையும் உடல் ஈர்த்துக்கொள்ளும்.
👉 ஆனால், பகல் வேளையில் பால் குடிப்பது மந்தமான உணர்வைக் கொடுக்கும்.
சர்க்கரை :
👉 காலை உணவில் எவ்வளவு வேண்டுமானாலும் (சர்க்கரை நோய் இல்லையென்றால்) சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது ஆற்றலை அதிகரிக்கும்.
👉 ஆனால், இரவு உறங்குவதற்கு முன்பு குடிக்கும் பால் அல்லது உணவிலோ சர்க்கரை சேர்த்துக் கொள்வது தேவையில்லாத கொழுப்பை உங்கள் உடலில் தங்கச் செய்யும்.
👉 இந்த தேவையில்லாத கொழுப்பு இதய நோய் முதல் பல நோய்களை உண்டாக்கும்.
நன்றி
Comments
Post a Comment