நீரழிவு நோய்க்கும் மருந்து


நீரழிவு நோய்க்கும் மருந்து?

நமது உடலில் இயற்கையாக சுரக்கும் இன்சுலின் என்கிற ஹார்மோனின் அளவு குறையும் போது, நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள குளுக்கோஸ் இரத்தத்தில் தேங்க ஆரம்பித்து விடும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதையே நீரிழிவு என்கிறோம். அடிப்படையில் இது ஒரு உடல் குறைபாடே தவிர பலரும் நினைப்பதைப் போல நோய் இல்லை.


தொடர்ச்சியான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த குறைபாட்டினை கட்டுக்குள் வைத்திருக்கலாம். நிரந்தர தீர்வு என்று எதுவும் இதுவரை அறியப் படவில்லை. இத்தகைய நீரிழிவு பற்றி நமது சித்தர் பெருமக்களும் கூறியிருக்கின்றனர்.

இதோ நீரழிவு நோய்க்கும் மருந்து

வன்னிமரத்தின் இலை, அத்திப் பிஞ்சு இவை இரண்டையும் நிழலில் உலர்த்திப் பொடித்து சூரணமாகச் செய்துகொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த சூரணத்தை எருமைப் பாலில் போட்டால் பால் துவைந்து போய் விடுமாம். துவைந்த அந்தப் பாலுடன் நல்லெண்ணெய் சேர்த்து ஆறுநாள் உட்கொள்ள நீரிழிவு சலரோகங்கள் யாவும் போகும் என்கிறார். இந்த மருந்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.


இதன் சாத்திய, அசாத்தியங்கள் ஆய்வுக்கு உட்பட்டவை என்பதால், தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம்.


இது ஒரு தகவல் பகிர்வு மாத்திரமே!, தகவல்கள் ஆய்வுக்குட்பட்டவை!!


Comments

Popular posts from this blog

ஆண்மை அதிகரிக்க ஒரு பழச் சாறு

பெண்களின் பிறப்புறுப்பு இதழ்கள் (கிளிட்டோரிஸ்) பற்றி சில‌ சுவாரஸ்யத் தகவல்கள்!

பெண்களின் பின்னழகில் உள்ள மயக்கம்??